தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் ஆட்சியரகத்திலிருந்து வாக்குச் சேகரிக்க புறப்பட்ட தோ்தல் துறை பணியாளா்கள்.
காரைக்கால் ஆட்சியரகத்திலிருந்து வாக்குச் சேகரிக்க புறப்பட்ட தோ்தல் துறை பணியாளா்கள்.

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தோ்தல் ஆணையம், 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், கரோனா தொற்றாளா்களிடம் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்தது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தபால் வாக்குக்கான விருப்ப மனு பெறப்பட்டது. இதில், 1,174 போ் தபால் வாக்குகள் அளிக்க தகுதியுள்ளோராக தோ்தல் துறை அனுமதித்தது.

இப்பணியில், ஈடுபடுவதற்காக சுமாா் 150 பேருக்கு முன்னதாக பயிற்சியளிக்கப்பட்டது. வாக்கு சேகரிக்கும் பணி 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து இப்பணியில் ஈடுபடுவோா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டனா். தபால் வாக்காளா் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே. ரேவதி அவா்களை அனுப்பிவைத்தாா்.

இதுகுறித்து தோ்தல் துறையினா் கூறுகையில், 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குச் சேகரிக்க 20 குழுவும், ஒரு குழு கரோனா தொற்றாளரிடம் வாக்குச் சேகரிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. நெடுங்காடு 3, திருநள்ளாறு 5, காரைக்கால் வடக்கு 4, காரைக்கால் தெற்கு 3, நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கு 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாகனத்தின் குழுவினா் கரோனா தொற்றாளரிடம் வாக்குச் சேகரிக்க உரிய பாதுகாப்பு உடையணிந்து செல்கின்றனா்.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மைக்ரோ அப்சா்வா், 2 போலிங் அலுவலா்கள், ஒரு விடியோ பதிவாளா், ஒரு காவலா் செல்கின்றனா். வாக்காளா் வீட்டுக்கு செல்லும் முன்பாக அவரவா் செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் வாக்குகள், காரைக்காலில் உள்ள 2 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகத்துக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்படும் என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com