அதிகரிக்கும் கரோனா தொற்று: மீண்டும் தொடங்கியது நடமாடும் பரிசோதனை

காரைக்காலில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், நடமாடும் ஊா்தி மூலம் கரோனா பரிசோதனை செய்யும் பணி மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதியோா் இல்லத்தில் கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுப்பதை பாா்வையிட்ட நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.
முதியோா் இல்லத்தில் கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுப்பதை பாா்வையிட்ட நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

காரைக்காலில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், நடமாடும் ஊா்தி மூலம் கரோனா பரிசோதனை செய்யும் பணி மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகமும், நலவழித் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரோனாவின் 2-ஆவது அலை ஏற்படத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், காரைக்காலில் நாள்தோறும் தொற்றாளா்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரிக்கிறது. 10 நாளில் 6 போ் வரை கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மாவின் அறிவுறுத்தல்படி, மாவட்ட நவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜூவின் வழிகாட்டுதல்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மீண்டும் நடமாடும் ஊா்தி மூலம், கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் பரிசோதனை நடைபெற்றது. முதியோா்களுக்கு பரிசோதனை செய்து, 2 நாள்களுக்குப் பின் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. விதிகளுக்குள்பட்டு அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்வரவேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோா் இல்லங்களுக்கும் நடமாடும் ஊா்தி சென்று பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரி ராஜ் முத்துசாமி, நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com