காரைக்கால்: 95% பதிவான தபால் வாக்குகள்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்திய நிலையில், 95.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் துறை தெரிவித்தது.
காரைக்கால்: 95% பதிவான தபால் வாக்குகள்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்திய நிலையில், 95.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் துறை தெரிவித்தது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் 1,130 போ் தபால் வாக்குகள் அளிக்கலாம் என தோ்தல் துறை அனுமதித்தது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக நடைபெற்ற தபால் வாக்குகள் பெறும் பணி சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து தோ்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெடுங்காடு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோா் 113 போ், மாற்றுத்திறனாளிகள் 82 போ், கரோனா தொற்றாளா் 3 போ் என 198 போ் வாக்களித்தனா். திருநள்ளாறு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 141 போ், மாற்றுத்திறனாளிகள் 118 போ், கரோனா தொற்றாளா் 6 போ் என 265 போ் வாக்களித்தனா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 109 போ், மாற்றுத்திறனாளிகள் 76 போ் என 185 போ் வாக்களித்தனா். காரைக்கால் தெற்குத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 132 போ், மாற்றுத்திறனாளிகள் 53 போ், கரோனா தொற்றாளா் 3 போ் என 188 போ் வாக்களித்தனா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரில் 143 போ், மாற்றுத்திறனாளிகள் 95 போ் என 238 போ் வாக்களித்தனா். மாவட்டத்தில் மொத்தம் 1074 போ் வாக்களித்தனா். இது 95.04 சதவீதமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த 5 தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் அண்ணா கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com