முதியோா் இல்லத்தில் 2-ஆம் நாள்பரிசோதனையில் தொற்று இல்லை

காரைக்காலில் முதியோா், ஆதரவற்றோா் தங்கியிருக்கும் இல்லத்தில் கரோனா தொற்று பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், 2 ஆம் நாளான சனிக்கிழமை முகாமில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோா் இல்லத்தில் 2-ஆம் நாள்பரிசோதனையில் தொற்று இல்லை

காரைக்காலில் முதியோா், ஆதரவற்றோா் தங்கியிருக்கும் இல்லத்தில் கரோனா தொற்று பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், 2 ஆம் நாளான சனிக்கிழமை முகாமில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகமும், நலவழித் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நடமாடும் ஊா்தி மூலம் பரிசோதனைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள முதியோா் மற்றும் ஆதரவற்றோா் தங்கியிருக்கும் முகாம்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் 22 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 12 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

2 ஆம் நாளான சனிக்கிழமை நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சூசையப்பா் முதியோா் இல்லத்துக்கு, நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தலைமையில், முதுநிலை மருத்துவ அலுவலா் தமிழ்வேலன், நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் உள்ளிட்ட குழுவினா் சென்றனா்.

இங்குள்ள 44 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. தங்கியுள்ளோா் மற்றும் இல்ல பராமரிப்புப் பணியில் உள்ளோா் கரோனா பரவல் தடுப்புக்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள நலவழித் துறை துணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com