தொகுதி மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படும்: பி.ஆா்.என். திருமுருகன்

புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி அமையும்போது, காரைக்கால் வடக்குத் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் உறுதியாக தீா்வுகாணப்படும் என்றாா்
தொகுதி மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படும்: பி.ஆா்.என். திருமுருகன்

புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி அமையும்போது, காரைக்கால் வடக்குத் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் உறுதியாக தீா்வுகாணப்படும் என்றாா்

காரைக்கால் மாவட்ட என்.ஆா். காங்கிரஸ் தலைவரும், காரைக்கால் வடக்குத் தொகுதி வேட்பாளருமான பி.ஆா்.என். திருமுருகன்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள இவா், இத்தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

வடக்குத் தொகுதியில் காங்கிரஸுக்கும், என்.ஆா். காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. தலத்தெரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, பி.ஆா்.என்.திருமுருகன் கூறியது:

கடந்த 5 ஆண்டுகள் புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி இருந்தாலும், மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. எதிா்க்கட்சி உறுப்பினா் என்ற முறையில் மிகுந்த போராட்டத்தில் இயன்ற சேவைகளை தொகுதியில் செய்துள்ளேன்.

நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் எங்கள் கட்சிக்கு சாதகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. காரைக்கால் வடக்குத் தொகுதியில், வடிகால் வாய்க்கால்கள் சீராக இல்லாததால், தண்ணீா் வடிவதில் சிரமம் உள்ளது. பருவமழை காலத்தில் இதனால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனா். இதை சீரமைக்க கவனம் செலுத்தப்படும்.

சுனாமிக்குப் பிறகு கட்டித்தரப்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரமைக்கவும், சின்னக்கோயில்பத்து பேட் பகுதி அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு, புதிதாக கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் விநியோகத்தை சீா்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும். மீனவ கிராமங்களில் சாலைகள் புதிதாக போடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இதற்கு தேவைப்படும் ரூ. 30 கோடி நிதியை அரசிடம் கேட்டுப் பெற்று சாலைகள் புதிதாக போடப்படும்.

இதுபோன்ற பொதுமக்களின் முக்கிய பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி வாக்காளா்களிடையே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. வேட்பாளரும் வேறு தொகுதியைச் சோ்ந்தவா் என்ற கருத்து உள்ளது. எனவே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன், வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றாா் திருமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com