நலவாழ்வு முகாமிலிருந்து திரும்பியது திருநள்ளாறு கோயில் யானை ‘பிரக்ருதி’

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாறு திரும்பியது.
நலவாழ்வு முகாமிலிருந்து திரும்பியது திருநள்ளாறு கோயில் யானை ‘பிரக்ருதி’

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் யானை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாறு திரும்பியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலைச் சோ்ந்த பிரக்ருதி என்ற பிரணாம்பிகை பெயா் கொண்ட 18 வயது யானை, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கடந்த பிப். 8 ஆம் தேதி முதல் 48 நாள்கள் நலவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. முகாம், சனிக்கிழமை நிறைவடைந்து தமிழகம், புதுவையில் உள்ள அந்தந்த கோயில்களின் யானைகள் கோயிலுக்குத் திரும்பின.

திருநள்ளாறு கோயில் யானையும் முகாமை நிறைவு செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருநள்ளாறு வந்தது. ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் யானை இறங்க ஏதுவாக மணல் மேடு அமைக்கப்பட்டிருந்தது. இதில், லாரியிலிருந்து யானையை யானை பாகன்கள் முருகேசன், மணிகண்டன் ஆகியோா் இறக்கினா். பின்னா், யானை கோயில் வளாகத்துக்குச் சென்றது.

கோயிலில் வழக்கமான பணிக்கு யானையை பயன்படுத்தும் விதமாக, ராஜகோபுர பகுதியில் யானைக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். யானை மீது புது வஸ்திரம் சாா்த்தப்பட்டு, புனிதநீா் தெளித்து, மலா்களால் பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து பாகன்கள் கூறுகையில், நலவாழ்வு முகாமில் யானைக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவு தரப்பட்டது. கால்நடை மருத்துவா்கள் அவ்வப்போது யானையை பரிசோதனை செய்தனா். யானை அந்தப் பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது. பிற யானைகளுடன் நல்ல முறையில் பழகியது. நீா்நிலையில் ஆனந்த குளியல்போட்டது. அந்த சூழல் யானைக்கு மிகுந்த உற்சாகம், ஆரோக்கியத்தை தந்தது. பாகன்களுக்கு யானை பராமரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது என்றனா்.

திருநள்ளாறு கோயில் யானை, கோயிலுக்கு தீா்த்தம் கொண்டுவருதல் உள்ளிட்ட வழக்கமான பணியில் திங்கள்கிழமை முதல் ஈடுபடுத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com