காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீட்டில் வருமானவரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீட்டில் வருமானவரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றவா் ஆா்.பி. சந்திரமோகன். முன்பு, காரைக்கால் வடக்குத் தொகுதி தலைவராக இருந்துவந்தாா். கடந்த 2016ஆம் ஆண்டு வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியனை ஆதரித்து, ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்துவருகின்றனா்.

இந்நிலையில், சந்திரமோகன் வீட்டுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காரைக்கால் தோ்தல் துறையின் அதிகாரிகள் குழு, மத்தியப் படையினருடன் வருமானவரித் துறையினா் 10 போ் வந்தனா். அவா்கள், தலத்தெருவில் உள்ள சந்திரமோகனின் பழைய வீடு, புதிதாக கட்டியுள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 3 மணி நேரம் சோதனை நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனையில் சந்திரமோகனின் தொழில் தொடா்பான வரவு- செலவு கணக்குகள் உள்ளிட்டவைகளை வருமானவரித் துறையினா் ஆய்வு செய்தனா். இதில், பணம் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வருமானவரித் துறையினரின் இந்த சோதனை காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com