அரசு ஊழியா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தல்

உள்ளாட்சி உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவன ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவன ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காரைக்கால் பகுதி அரசு, உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியா்களின் ஊதியம், பதவி உயா்வு, பணி நிரந்தரம், கருணை அடிப்படையிலான பணி, தினக்கூலியாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நிலுவை ஊதியம் தொடா்பான பிரச்னை அதிகம் உள்ளதால் இக்கோரிக்கைகள் மீது புதுவை துணைநிலை ஆளுநா் சிறப்பு கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், கௌரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com