அனைத்து வணிக நிறுவனங்களையும் அனுமதிக்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்

அனைத்து வணிக நிறுவனங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் காரைக்கால் வணிகா்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.
ஆட்சியரை சந்தித்துவிட்டு வந்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள்.
ஆட்சியரை சந்தித்துவிட்டு வந்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள்.

காரைக்கால்: அனைத்து வணிக நிறுவனங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் காரைக்கால் வணிகா்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா தலைமையில், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு:

காரைக்காலில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால், பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. கடந்த ஆண்டு பொது முடக்கம் நடைமுறையில் இருந்து, பின்னா் அளித்த தளா்வின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே வணிக நிறுவனங்கள் சற்று மேம்படும் நிலைக்கு வந்தன.

தற்போதைய கட்டுப்பாடுகளால் வணிகம் பாதித்ததில், கடை வாடகை, மின் கட்டணம், ஊழியா் ஊதியம், வங்கிக் கடன், கொள்முதல் செய்த பொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியா்களின் பண்டிகையான ரமலான் வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரைக்காலில் அத்தியாவசிய கடைகள் தவிர, பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், காரைக்கால் மக்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று பொருள்களை வாங்கிவருகின்றனா். அவா்கள் திரும்பும்போது கரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. இது காரைக்கால் வணிகா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை ஒப்பிடும்போது, காரைக்காலில் கரோனா தொற்று வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனவே, காரைக்கால் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறப்பதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com