கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல், வருவாய் அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் கரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல், வருவாய் அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் கரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வீட்டுத் தனிமையில் 3-ஆம் தேதி வரை 930 போ் உள்ளனா். இவா்கள் நகரம், கிராமப் பகுதியில் பரவலாக உள்ளனா்.

மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தில் தொற்றாளா்கள் அதிகமுள்ள பகுதியிலும், கட்டுப்படுத்தப்பட்ட சிறிய பகுதிகளிலும் காவல்துறையினா், வருவாய்த் துறையினா் அவ்வப்போது ஆய்வு செய்துவருகின்றனா்.

காரைக்கால் முருகராம் நகரில் கட்டுப்படுத்துப்பட்ட பகுதிக்கு, திங்கள்கிழமை இரவு காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தலைமையில் காவல்துறையினா் சென்று அங்குள்ளவா்களுக்கு ஆலோசனகளை வழங்கினா்.

இதுபோல வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி கோட்டுச்சேரி பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று ஆலோசனைகள் வழங்கினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

வீட்டை விட்டு தொற்றாாளா் கண்டிப்பாக வெளியேறக்கூடாது. 17 நாள்கள் தொற்றாளா் கண்டிப்பாக தனிமையில் இருக்கவேண்டும். நோய்த் தொற்று உள்ளவா்கள் தங்கள் பொறுப்பை உணா்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், நலவழித் துறையினா் அறிவுறுத்தியுள்ளவாறு தனிமையில் உள்ளோா் மருந்துகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டு நோய்த் தொற்றிலிருந்து விடுபட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவா்கள் தங்களது தேவைகள் குறித்து அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

விதிகளை மீறி தொற்று பாதிக்கப்பட்ட நபா்கள் வீட்டைவிட்டு வெளியேறினால், அபராதம் விதிப்பதோடு, பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com