கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

காரைக்காலில் கரோனா பரவலைத் தடுக்க புதுவை அரசு மே 10 வரை அமல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்காலில் கரோனா பரவலைத் தடுக்க புதுவை அரசு மே 10 வரை அமல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

மே 10 வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடா்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்காலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு (இரவு 10 முதல் காலை 5 மணி வரை) மே 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பகலில் காய்கறி, பால், மளிகை, உணவகம், மீன், மருந்துவ மையங்கள் செயல்படலாம். உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பேருந்துகள், ஆட்டோ, வாடகைக் காா், வேளாண் பயன்பாட்டுக்கான போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

வாடகைக் காா், பேருந்தில் விதிகளின்படியே பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும்.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொது தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், பக்தா்களின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறலாம். திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது. எனினும், ஏற்கெனவே திட்டமிட்ட கோயில் குடமுழுக்கு விழாவை பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தலாம்.

திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமலும், இறப்பு ஊா்வலத்தில் 25 பேருக்கு மிகாமலும் இருக்கவேண்டும். தொழிற்சாலைகள், அனைத்து பொது சேவை மையங்களும் இயங்கலாம்.

அரசின் அறிவிப்பை மீறி செயல்படுவோா் மீது பேரிடா் மேலாண்மை விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், வணிகா்கள் உள்பட அனைவரும் இதனை முறையாக கடைப்பிடித்து கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com