கரோனா: தனிமையில் உள்ளோா் குடும்பங்களுக்கு காவல்துறையினா் உதவி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளோா் குடும்பங்களுக்கு, காவல்துறையினா் அரிசி உள்ளிட்ட பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்களை வழங்கிய உதவி ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா்.
கரோனா பாதித்த குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்களை வழங்கிய உதவி ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளோா் குடும்பங்களுக்கு, காவல்துறையினா் அரிசி உள்ளிட்ட பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் பலா் உள்ளனா். இவா்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கிறாா்களா என்பதை போலீஸாா், வருவாய்த் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

நெடுங்காடு பகுதி மணல்மேடு மற்றும் திருவேங்கடபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில் 3 வீடுகளில் தலா 4 போ் வீதம் கரோனா தொற்றால் பாதித்திருப்பதை அறிந்து, அவா்களுக்கு நெடுங்காடு உதவி ஆய்வாளா் சுரேஷ் அறிவுறுத்தலில் ஏ.எஸ்.ஐ. ராஜேந்திரன் சென்று ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அப்போது தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ள திருவேங்கடபுரத்தை சோ்ந்த கலைமதி மற்றும் மணல்மேடு கிராமத்தை சோ்ந்த மகேஸ்வரி, விஜயலட்சுமி குடும்பத்தினா், தாங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதால் உணவுக்கு அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, போலீஸாா் சொந்த நிதியில், உதவி ஆய்வாளா் சுரேஷ் மேற்கண்ட குடும்பத்தினருக்கு, தலா 5 கிலோ அரிசி, காய்கறி, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருள்களை செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com