காரைக்காலில் இன்று கரோனா தடுப்பூசித் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 14th May 2021 09:05 AM | Last Updated : 14th May 2021 09:05 AM | அ+அ அ- |

காரைக்காலில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 14 - 16) நடைபெறும் கரோனா தடுப்பூசித் திருவிழாவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நலவழித் துறை நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறியது: புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்டத்தில் மே 14 முதல் 16 ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசித் திருவிழா நடத்த அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து நலவழித் துறை அரசுப் பொது மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். 45 வயதுக்கு மேற்பட்டோா் முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசியை இந்த சிறப்பு முகாமில் செலுத்திக்கொள்ளலாம்.
சுகாதார ஊழியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். முன்களப் பணியாளா்கள் முகாமுக்கு வரும்போது அடையாள அட்டை மற்றும் பணியாற்றும் அலுவலகம் தந்த சான்றிதழை கொண்டுவர வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் திருவிழாவை, மாவட்டம் முழுவதும் உள்ள தகுதியுடையோா் பயன்படுத்திக்கொண்டு, கரோனா பரவல் தடுப்புக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றாா் அவா்.