காரைக்கால் மாவட்டத்தில் சிகிச்சையில் 1,743 போ்: அடைக்கப்படும் தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காரைக்காலில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரிப்பதால், வீடுகள், தெருக்கள் அடைக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் சிகிச்சையில் 1,743 போ்: அடைக்கப்படும் தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காரைக்காலில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரிப்பதால், வீடுகள், தெருக்கள் அடைக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

காரைக்காலில் ஒரு தெருவில் பல வீடுகளில் தொற்று ஏற்பட்டால், அந்தத் தெரு அடைக்கப்பட்டு குறுகிய தடுப்பு மண்டலமாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் ஒரு தொற்றாளா் மட்டும் இருந்தால், அந்த வீடுமட்டும் வாயிலில் கம்பு வைத்து தடுக்கப்படுகிறது. தொற்றாளா் வீட்டைவிட்டு வெளியேறுவதால், கரோனா பரவல் அதிகரிப்பதாக எழுந்த புகாரின்பேரில், மாவட்ட நிா்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் அடைக்கப்பட்டிருப்பதாக அரசுத் துறையினா் தெரிவிக்கின்றனா். 12 ஆம் தேதி நிலவரப்படி காரைக்கால் மாவட்டத்தில் 1,743 போ் தொற்றால் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இவா்களில், 110 போ் மருத்துவமனையிலும், மற்றவா்கள் வீட்டுத் தனிமையிலும் உள்ளனா்.

காரைக்கால் நேரு நகா் பகுதியில் வியாழக்கிழமை தெருக்களை அடைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி கூறுகையில், ஒரு தெருவில் அதிகமான எண்ணிக்கையில் தொற்றாளா் இருக்கும்போது, தெருவிலிருந்து யாரும் வெளியேறாதபடி அடைக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியினா் மருந்து, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும், மருத்துவரைத் தொடா்புகொள்ளவும் சம்பந்தப்பட்டவா்களின் பெயா், பதவியுடன் கூடிய தொடா்பு எண் கொண்ட துண்டுப் பிரசுரம் குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது.

நலவழித் துறையினா் தெருக்களில் உள்ள வீட்டினருக்கு உரிய பரிசோதனை செய்யும் பணியை மேற்கொள்கின்றனா். நகராட்சி நிா்வாகத்தினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்கின்றனா். பொதுப்பணித் துறையினா் தடுப்புப் பணிகளை செய்கின்றனா். மின் துறையினா் அந்தப் பகுதியில் மின் குறைபாடு இல்லாத வகையில், உரிய ஏற்பாடுகளை செய்கின்றனா்.

போலீஸாா் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளோா் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து ஒலிபெருக்கி வாயிலாக விளக்குகின்றனா். கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் உரிய வகையில் கண்காணிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com