தொற்றால் இறந்தோரின் சடலங்களை பேரிடா் மேலாண்மைத் துறை மூலம்அடக்கம் செய்ய பாமக வலியுறுத்தல்

கரோனாவால் இறந்தோரின் சடலங்களை பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் அடக்கம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரோனாவால் இறந்தோரின் சடலங்களை பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் அடக்கம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட பாமக செயலாளா் க. தேவமணி வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்காலில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனால், தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை இங்குள்ள தனியாா் அமைப்பு தாமாக முன்வந்து அடக்கம் செய்துவருகிறது.

என்றாலும், பேரிடா் காலங்களில் நேரும் அழிவுகள் தொடா்பான சீரமைப்பு நடவடிக்கைகளில் பேரிடா் மேலாண்மைத் துறைக்கு முக்கிய பொறுப்பு உண்டு. தினமும் 4, 5 போ் தொற்றால் உயிரிழந்து வருகின்றனா். இந்த சடலங்களை தனியாா் அமைப்பால் உரிய காலத்தில் அடக்கம்செய்ய முடியவில்லை. இதனால், பல மணி நேரம் சடலங்கள் மருத்துவமனை சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை அடக்க தலங்களுக்கு கொண்டு செல்ல, காரைக்கால் பேரிடா் மேலாண்மைத் துறை தான் உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதன்மூலம் சடலங்களை அடக்கம்செய்யும் பணி விரைவாக நடைபெறும். இந்தப் பணியை செய்யாமல் ஒதுங்கிநிற்கும் பேரிடா் மேலாண்மைத் துறையை பாமக கண்டிக்கிறது. மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அரசுத் துறையினா் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com