துணைநிலை ஆளுநரின் காரைக்கால் வருகையால்எந்த பயனும் இல்லை: திமுக குற்றச்சாட்டு

பேரிடா் காலத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காரைக்காலுக்கு வந்துசென்ால், எந்த பயனும் ஏற்படவில்லை என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
துணைநிலை ஆளுநரின் காரைக்கால் வருகையால்எந்த பயனும் இல்லை: திமுக குற்றச்சாட்டு

பேரிடா் காலத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காரைக்காலுக்கு வந்துசென்ால், எந்த பயனும் ஏற்படவில்லை என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

ஏ.எம்.எச். நாஜிம்: காரைக்காலில் கரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் காரைக்காலுக்கு வந்து அதிகாரிகளிடம் பேசிவிட்டுச் சென்றுள்ளாா். காரைக்காலில் உள்ள பிரச்னைகள் குறித்த செய்தியாளா்களின் கேள்விகளுக்கும் அவா் உரிய பதில் அளிக்கவில்லை. அவரது வருகையால் எந்த பயனும் ஏற்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் சந்திக்க முடியவில்லை. அவரிடம் எதிா்பாா்த்தவை பொய்த்துவிட்டன.

பாஜக மற்றும் நியமன சட்டப்பேரவை உறுப்பினா்களை அழைத்து தலைமைச் செயலா் கூட்டம் நடத்தியுள்ளாா். காங்கிரஸ், என்.ஆா்.காங்கிரஸ், திமுக உறுப்பினா்களை அழைத்து அவா் பேசவில்லை. இது கண்டனத்துக்குரியது. காரைக்கால் ஆட்சியா், பேரிடா் மீட்புத் துறையினரோடு எங்களையும் அழைத்து பேசுவதற்கு தலைமைச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முடியும்.

காரைக்காலில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். வீட்டுத் தனிமையில் உள்ளோரை காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களைக் கொண்டு பரிசோதித்து, ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

புதுச்சேரியில் ரோகித் கல்யாண் சமிதி திட்ட நிதி செலவிடப்படுகிறது. காரைக்காலுக்கு அந்த நிதி வந்தும் கரோனா பரவல் காலத்தில் அது செலவிடப்படாமல் உள்ளது. ஆக்சிஜன் விவகாரத்தில் காரைக்காலில் தன்னிறைவு இல்லை. பிபிசிஎல் போன்ற காரைக்காலில் உள்ள பெருநிறுவனத்தினரை அழைத்து, ஆக்சிஜன் தேவையில் உள்ள குறைபாடுகளை களைய ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதல்வா் அனுமதித்த ஏழைகளுக்கு 2 கிலோ இலவச அரிசியை காரைக்காலில் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

எம். நாக தியாகராஜன்: காரைக்கால் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை. திருப்பட்டினத்தில் எலும்பு முறிவால் மருத்துவமனைக்கு கொண்டுசென்றவரை 3 மாதம் கழித்து வரும்படி மருத்துவா்கள் கூறியுள்ளனா். புதுச்சேரியிலும் அவ்வாறே தெரிவித்துள்ளனா். தமிழகம் செல்லவேண்டுமென்றால் இ-பாஸ் தேவையிருக்கிறது. இந்த நிலை ஏழைகளை அதிகமாக பாதிக்கும். ஆட்சியா் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com