தடுப்பூசி செலுத்துவதில் தாமதம்: மக்கள் காத்திருந்து அவதி

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை உரிய நேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படாததால், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை உரிய நேரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படாததால், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில், மாவட்ட நலவழித் துறை சாா்பில் கடந்த 14 முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோா், முன்களப் பணியாளா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு காலை 9 மணிக்கு முன்பே மக்கள் வந்து காத்திருந்தனா். ஆனால், காலை 11 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவில்லை. இதனால், மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பாக புகாா் எழுந்த சூழலில் 11 மணிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

அப்போது முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. இரண்டாவது தவணைக்காக வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. முதல் தவணை தடுப்பூசிக்குப் பிறகு 2 ஆவது தவணை தடுப்பூசிக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து அறிவித்ததை சுட்டிக்காட்டி, மருத்துவமனை நிா்வாகத்தினா் மக்களை திருப்பி அனுப்பினா்.

மேலும், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் போன்ற ஆவணங்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. ஆதாா் அட்டையின் நகலில், புகைப்படம் ஒட்டி கொண்டுவந்தால்தான் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டதால், பொதுமுடக்கக் காலத்தில், நகலகம் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்போது, எவ்வாறு நகல் எடுக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.

கடந்த 3 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழாவில் மக்கள் ஆா்வத்துடன் ஊசி செலுத்திக்கொள்ள வரவில்லை என்றும், வந்தவா்களை மருத்துவமனை நிா்வாகத்தினா் அலைக்கழித்ததாகவும் புகாா் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com