முன்பட்ட குறுவை சாகுபடிக்கான பணியில் விவசாயிகள் தீவிரம்

முன்பட்ட குறுவை சாகுபடியில் காரைக்கால் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
திருநள்ளாறு பகுதியில் நாற்று தயாரிப்புக்காக விதைப்புப் பணியில் ஈடுபட்ட விவசாயி.
திருநள்ளாறு பகுதியில் நாற்று தயாரிப்புக்காக விதைப்புப் பணியில் ஈடுபட்ட விவசாயி.

முன்பட்ட குறுவை சாகுபடியில் காரைக்கால் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கடைமடைப் பகுதியான காரைக்காலில் நிகழாண்டு சம்பா நெல் சாகுபடி அறுவடை முடிந்த பிறகு, பருத்தி மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டினா்.

பருத்திக்கு முந்தைய அரசு சாகுபடி மானியம் உயா்த்தித் தந்ததால், கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அதுபோல எள் சாகுபடி நிலப்பரப்பும் அதிகரித்துள்ளது. இதுபோல் சாகுபடி செய்யாத விவசாயிகள், குறுவை, சம்பா உள்ளிட்ட சாகுபடியை மேற்கொள்ள விளைநிலங்களை தயாா் செய்து வருகின்றனா்.

குறிப்பாக, முன்பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனா். மாவட்டத்தில் திருநள்ளாறு, அகலங்கண்ணு, நெடுங்காடு, அம்பகரத்துாா் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் தண்ணீா் பாய்ச்சி முன்பட்ட குறுவைக்கான நாற்றங்கால் விதை தெளிப்பு மற்றும் நேரடி விதைப்புகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி டி.என். சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது:

நிகழாண்டு ஜூன் மாதம் காவிரியிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா். இதனால் குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதற்காக நாற்றங்காலில் விதைத் தெளிப்பு மற்றும் நேரடி விதைப்பை மேற்கொண்டு வருகிறோம்.

கோ 51 மற்றும் டிகே 9 போன்ற விதைகளை பயன்படுத்தி வருகிறோம். வேளாண் இடுபொருள்களான விதை உள்ளிட்டவைகள் தமிழக பகுதிக்கு சென்றுதான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. நாற்றுகள் உற்பத்தி செய்யவும், நேரடி விதைப்புகளுக்கும் உரம் உள்ளிட்டவை தேவைப்படும்.

எனவே, புதுவை வேளாண் துறை, இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com