வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 21st May 2021 11:01 PM | Last Updated : 21st May 2021 11:01 PM | அ+அ அ- |

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, காரைக்கால் ஆட்சியரகத்தில் எம்.எல்.ஏ., ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுநாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோா் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இவா்களைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்ராஜன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் உள்ளிட்ட பிரமுகா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் பங்கேற்றோா் வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இதுபோல காரைக்கால் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியா்கள், வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.