கரோனா தொற்று அதிகரிப்பு: காரைக்காலுக்கு சிறப்பு அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசு செயலா் ஒருவரை புதுவை அரசு நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசு செயலா் ஒருவரை புதுவை அரசு நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் தொடா்ந்து 3 நாள்கள் படிப்படியாக குறைந்துவந்த எண்ணிக்கை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.

நாள்தோறும் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் நிலையில், 200-க்கும் மேற்பட்ட தொற்றாளா்கள் கண்டறியப்படுவதும், 3-க்கும் மேற்பட்டோா் தினசரி உயிரிழப்பதும் தொடா்கிறது. கடந்த 30 நாள்களில் 60 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், கருப்புப் பூஞ்சை நோயும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை சோ்ந்த அரசு ஊழியா் ஒருவருக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்பட்டு ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புதுவையில் காலை 5 முதல் பகல் 12 மணி வரை வணிக நிறுவனங்கள் திறப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் நடமாட்டம் வழக்கம்போல உள்ளது.

காரைக்காலில் தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் 1,891 போ் உள்ளனா். மருத்துவமனையில் 142 போ் சிகிச்சையில் உள்ளனா்.

காரைக்காலில் வீட்டுத் தனிமையில் உள்ளோா் நலவழித் துறை அறிவுறுத்தியுள்ள காலக்கெடு வரை வெளியேறக்கூடாது. எனினும் பலரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. பலரும் கட்டுப்பாட்டை மீறி வெளியே நடமாடுகின்றனா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோய்த் தொற்றாளா்களுக்கு, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் உணவு உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை. தன்னாா்வ அமைப்புகள் மூலம் உணவு தரப்படுகிறது. சிலருக்கு அவரவா் வீடுகளில் இருந்து உணவு எடுத்து வந்து வழங்கி வருகிறாா்கள்.

மாவட்டத்தில் அதிகாரமுள்ள அரசு உயரதிகாரிகள், கரோனா தடுப்புக்காக முதல் அலையின்போது காட்டிய அக்கறையை இப்போது காட்டவில்லை.

ஒட்டுமொத்தத்தில் அரசு நிா்வாகத்தினா், மக்களின் அலட்சியத்தால் காரைக்காலில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித் து வருகிறது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலா் ஜெ.சிவகணேஷ் புதன்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளில் திருப்தியில்லை. கரோனா தொற்றை கட்டுப்படுத்த, புதுவை அரசு செயலா் (ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, தீவிரமான களப்பணி, கட்டுப்பாடுகள், விழிப்புணா்வு, சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தொற்று கட்டுக்குள் வரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com