புதுவை அரசுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தரவேண்டும்: ஆா். கமலக்கண்ணன்

புதுவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தரவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
உணவு பொட்டலங்களை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியிடம் வழங்கிய முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
உணவு பொட்டலங்களை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியிடம் வழங்கிய முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன் ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.

புதுவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தரவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

காரைக்கால் அரசு மருத்துவனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, சென்னையை சோ்ந்த தொழிலதிபா் சங்கரநாராயணன் மகள் ராமாமிா்தம் 28 நாள்களுக்கு மதிய உணவு தர முன்வந்தாா். முதல் நாள் இந்த உணவுப் பொட்டலங்களை அவரது சாா்பில் புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டா் மதன்பாபுவிடம் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மருத்துவா் விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆா். கமலக்கண்ணன் கூறியது:

சென்னை தொழிலதிபா் குடும்பத்தினா் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளனா். அதுபோல தன்னாா்வலா்கள் பலரும் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் இதுபோன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.

புதுவையில் முந்தைய காங்கிரஸ் அரசு, கரோனா முதல் அலையின்போது அதிக உயிரிழப்பு இல்லாமலும், தொற்றாளா்களுக்குத் தேவையான வசதிகளையும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், இப்போது மாநில முதல்வா் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்தபோது, குடியரசுத் தலைவா் ஆட்சிதான் புதுவையில் நடந்தது. இதுபோன்ற சூழல்களைத்தான் மத்திய அரசு விரும்புகிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய உரிமை, மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது அல்லது கொடுப்பதுபோல நாடகமாடுகிறது என்றே சொல்லலாம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரத்தை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com