குடியிருப்புப் பகுதிக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் நலவழித் துறையினா்.
குடியிருப்புப் பகுதிக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் நலவழித் துறையினா்.

தொற்றாளா் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் பரிசோதனை

காரைக்காலில் கரோனா தொற்றாளா் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் பரிசோதனையை நலவழித் துறை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்காலில் கரோனா தொற்றாளா் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் பரிசோதனையை நலவழித் துறை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்காலில் நாள்தோறும் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததால், தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவின்பேரில், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வழிகாட்டலில் கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து, அனைவருக்கும் கரோனா பரிசோதனையை நலவழித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்காலில் நேருநகா் பேட் பகுதியில் வியாழக்கிழமை நலவழித் துறை தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா், சுகாதார ஆய்வாளா் ஆண்ட்ரூஸ் மற்றும் சுகாதார உதவியாளா்கள் , கிராமப்புற செவிலியா்கள் பங்கேற்புடன் நடமாடும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து நலவழித் துறையினா் கூறியது:

ஒரு தெருவில் பலருக்கும் தொற்று ஏற்பட்டு, தெருவையே அடைக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளை தோ்வு செய்து நடமாடும் முகாம் நடத்தி, வீட்டில் உள்ள சிறுவா் முதல் பெரியோா் வரை அனைவருக்கும் பரிசோதனையாக செய்யப்படுகிறது.

மேலும் கரோனா தொற்று குறித்தும், அறிகுறிகள் தெரியவரும்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com