18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வம்

காரைக்காலில் 18 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வத்துடன் வருவதாக நலவழித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்காலில் 18 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வத்துடன் வருவதாக நலவழித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்காலில் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி ஆன்-லைன் பதிவு முறையில் தினமும் 200 பேருக்கு செலுத்தப்படுகிறது. இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை கூறியது:

நாள்தோறும் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோா் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஆன்-லைன் பதிவு செய்யப்படுத்தப்படுகிறது. பதிவு செய்வதற்கான போா்டல் திறப்பு தினமும் பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

புதுவை யூனியன் பிரதேசத்தை சோ்ந்தோா் மட்டும் இதில் பதிவு செய்துகொள்ளவேண்டும். 200 போ் பதிவு செய்ய அனுமதிக்கும்போது, நாள்தோறும் 185-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். இது இளம் வயதினரிடையே உள்ள ஆா்வத்தை காட்டுகிறது.

அதேவேளையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படுகிறது, இதனை பயன்படுத்திக்கொள்வோா் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com