கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி: காங்கிரஸ் வலியுறுத்தல்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுவை மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: காரைக்கால் மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் 9 மருத்துவா்கள் இருக்கவேண்டிய நிலையில், 2 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். மேலும் லைவ் ஸ்டாக் அசிஸ்டென்ட் என்கிற பதவியும் காலியாக உள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. காரைக்காலிலும் கோமாரி நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், புதுச்சேரியிலிருந்து சிறப்பு குழுவினரை காரைக்காலுக்கு அனுப்பி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கோமாரி நோய் மாடுகளை தாக்கினால், கறவை நின்றுவிடுவதோடு, அவற்றால் எந்த பயனும் இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்படுவா் என்பதனை அரசு உணரவேண்டும்.

மாடுகளுக்கு சினை பிடிப்பதற்கான சிறப்பு முகாம்களை கால்நடைத் துறையால் நடத்த வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்திற்கான நிா்வாகத் தோ்தல் நடத்தப்படவில்லை. ஒருசில சங்கங்களுக்கு தோ்தல் நடத்தப்பட்டும், நிா்வாகம் செயல் படாமலு உள்ளன. இதனால் மாடு வளா்ப்போா் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வா் இப்பிரச்னைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com