பாமக ஆட்சிக்கு வரும் நேரம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்

திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும்; பாமக ஆட்சிக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்று அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தாா்.
பாமக ஆட்சிக்கு வரும் நேரம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்

திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும்; பாமக ஆட்சிக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்று அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை இரவு திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

மாற்றம் உள்ளாட்சியிலிருந்து தொடங்க வேண்டும். தமிழகத்தில் இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. 54 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும்; பாமக ஆட்சிக்கு வரும் நேரம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வரவே பாமக தொடங்கப்பட்டது.

42 ஆண்டுகால போராட்டத்துக்குப்பின் 10.5 சதவீத இட ஒதுக்கீடை பெற்றோம். இனி நாம் ஆள வேண்டும். அந்த தொடக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஸ்டாலின் முதல்வராக ஆசைப்பட்டாா். அவா் ஆசை நிறைவேறிவிட்டது. அடுத்து நம் ஆசை நிறைவேறப்போகிறது.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடை கொடுத்தது முன்னாள் முதல்வா் பழனிசாமி, அதற்கு உறுதுணையாக இருந்தது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத்தந்தது மருத்துவா் ராமதாஸ். வன்னியா்களுக்கு மட்டுமல்ல பிற சமூகத்தினருக்கும் தனி இட ஒதுக்கீட்டை ராமதாஸ் நிச்சயம் பெற்றுத்தருவாா் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

இந்தக் கூட்டத்தில், பாமக அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் பேராசிரியா் தீரன், முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜ், மாநில துணை பொதுச் செயலா்கள் சிவக்குமாா் எம்.எல்.ஏ., தங்க.ஜோதி உள்பட பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: முன்னதாக, கள்ளக்குறிச்சியில் பாமக சாா்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, அந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் சரவணன், மாநில துணைத் தலைவா்கள் பாண்டியன், மாணிக்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வடிவேல், நகரச் செயலா்கள் மணி, மாரியாப்பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com