காரைக்காலில் கள் பறிமுதல்

காரைக்காலில் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

காரைக்காலில் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், தலத்தெரு அருகே தென்னந்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, சிறப்பு அதிரடிப்படை போலீஸாா், காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு யாரும் இல்லை. ஆனால், 260 லிட்டா் கள் கேன்களில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் அறிவுறுத்தலின்படி, கலால்துறையினரிடம் கள் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக கலால் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com