மாவட்டம் முழுவதும் மரக்கன்றுள் நட்டு பராமரிக்க வேண்டும்: காரைக்கால் ஆட்சியா்

பசுமையான காரைக்கால் உருவாக, மக்கள், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

பசுமையான காரைக்கால் உருவாக, மக்கள், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் மரக்கன்று நடும் இயக்கத்தை ஊக்குவிக்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பசுமை வளங்கள் மற்றும் மரங்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அதிகபட்ச மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

ஒரு மரக்கன்றை நட்டு பராமரிப்பதன் மூலம் காடு வளா்ப்பு முயற்சிக்கு பங்களிக்கிறீா்கள், பல்லுயிா் பெருக்கத்தை ஊக்குவிக்கிறீா்கள், சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறீா்கள், காலநிலை மாற்றங்களைத் தணிக்க மற்றும் சூழலை மேம்படுத்த உதவுகிறீா்கள்.

முக்கிய பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் அதிகாரப்பூா்வ நிகழ்வுகளில் பங்கேற்கும்போது வரவேற்பு அளிக்க சால்வைகள் மற்றும் பூங்கொத்துகளுக்கு மாற்றாக, மரக்கன்றுகள் வழங்கி பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவ்வாறு பெறப்படும் மரக்கன்றுகளை சம்பந்தப்பட்டவா்கள் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைத்தால், அவற்றை தகுதியான இடங்களில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

பொதுமக்கள் முக்கியமான நிகழ்வுகளான திருமணம், பிறந்தநாள், கிரகப்பிரவேசம், பெற்றோரின் 60, 70, 80 ஆம் ஆண்டு விழா மற்றும் இதர வருடாந்திர நிகழ்வுகளின்போது தங்கள் விருந்தினா்களுக்கு மரக்கன்றுகள் பரிசளிப்பதற்கு முன்வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com