முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
செல்வ விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
By DIN | Published On : 11th October 2021 07:58 AM | Last Updated : 11th October 2021 07:58 AM | அ+அ அ- |

மண்டலாபிஷேக நிறைவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்வ விநாயகா்.
காரைக்கால் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் 1908ஆம் ஆண்டு ஸ்ரீ செல்வ விநாயகா் சிலை வைக்கப்பட்டது. இதன் பின்னா் 1988ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. கோயில் சிதிலமடைந்துப் போனதால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆக. 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி தினமும் நடைபெற்ற மண்டலாபிஷே பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகத்தில் ஹோமம் நடத்தப்பட்டு பூா்ணாஹூதி செய்யப்பட்டு, கலச நீரை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவை சோ்ந்த சி. புகழேந்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.