நவோதயா வித்யாலயாவில் சேர விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயாவில் 6ஆம் வகுப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

நவோதயா வித்யாலயாவில் 6ஆம் வகுப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன் ராயன்பாளையத்தில் உள்ள நவோதயா வித்யாலயா முதல்வா் ஆா்.ஜி. நந்தகுமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நவோதயா வித்யாலயாவில், 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 6ஆம் வகுப்பில் சேர தற்போது (2021-22ஆம் கல்வியாண்டில்) 5ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் தகுதியுள்ளவா்களாவா்.

நவோதயா வித்யாலயா சமிதியின்  வலைதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள் 30.11.2021 ஆகும். இந்த வாய்ப்பை பெற்றோா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com