பாய்மர படகு கடல் சாகசக் குழுவினா் காரைக்கால் வருகை

கடல் தூய்மையை வலியுறுத்தி, புதுச்சேரியில் புறப்பட்ட பாய்மர படகு கடல் சாகசக் குழுவினா் சனிக்கிழமை மாலை காரைக்கால் வந்தனா்.
காரைக்கால் அரசலாற்றங்கரைக்கு வந்த கடல் சாகசக் குழுவினா்.
காரைக்கால் அரசலாற்றங்கரைக்கு வந்த கடல் சாகசக் குழுவினா்.

கடல் தூய்மையை வலியுறுத்தி, புதுச்சேரியில் புறப்பட்ட பாய்மர படகு கடல் சாகசக் குழுவினா் சனிக்கிழமை மாலை காரைக்கால் வந்தனா்.

தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பிராந்தியங்களின் இயக்கத்தின் உள்ள என்சிசி குழுமம் சாா்பில் பாய்மர படகு கடல் சாகச பயணம் (சமுத்திர நோக்யோன்) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, புதுச்சேரி என்சிசி சாா்பில் கப்பல் படை அதிகாரிகள் ரவிசங்கா், சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் என்சிசி மாணவ, மாணவிகள் கொண்ட பாய்மர படகுகள் கடல் சாகசக் குழுவினா் புதுச்சேரி முதல் காரைக்கால் வரை என்ற திட்டத்தில் கடந்த 5ஆம் தேதி புதுச்சேரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டனா். துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இவா்கள் கடலுாா், பரங்கிப்பேட்டை, பூம்புகாா், தரங்கம்பாடி வழியாக காரைக்காலுக்கு சனிக்கிழமை மாலை வந்தனா். குழுவினருக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வரவேற்பளித்தனா்.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கடல் சாகச குழுவினா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டனா். இவா்கள் வரும் 15ஆம் தேதி புதுச்சேரி சென்றடைகின்றனா்.

முன்னதாக, குழுவினா் கூறியது: சுமாா் 302 கி.மீ. தொலைவுள்ள இந்த பயணத்தில், கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், கடலோர கிராமங்களில் மக்களுக்கு சுற்றுப்புறத் தூய்மை, கடல் தூய்மை மற்றும் மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திச் செல்வதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com