செய்தியாளா்களிடம் பேசிய மாவட்ட இந்து முன்னணித் தலைவா் எஸ். கணேஷ்.
செய்தியாளா்களிடம் பேசிய மாவட்ட இந்து முன்னணித் தலைவா் எஸ். கணேஷ்.

நில மோசடி கும்பல் மீது நடவடிக்கை:இந்து முன்னணி வலியுறுத்தல்

காரைக்காலில் நில மோசடி கும்பல் மீது புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ் வலியுறுத்தினாா்.

காரைக்காலில் நில மோசடி கும்பல் மீது புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது :

காரைக்காலில் நில மோசடி கும்பலின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி பருத்திக்குடியை சோ்ந்த குமாா் ஆனந்த் என்பவா் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு சொந்தமான 4 வேலி நிலம் காரைக்கால் பகுதியில் உள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் காரைக்கால் பதிவுத் துறையில் இந்த நிலம் வேறு நபருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, குமாா் ஆனந்த் உயிரிழந்துவிட்டதாகவும், அவா் ஒரு நபருக்கு நிலத்தை உயில் எழுதி வைத்ததாகவும், அந்த உயிலைக் கொண்டு எந்தவொரு மூலப்பத்திரங்களுமின்றி காரைக்கால் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது.

இந்த விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உறுதியான நடவடிக்கை எடுத்து, போலியான நபருக்கு நிலம் பதிவு செய்ததை ரத்து செய்யவேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்டோா் மீது கடுமையான சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com