காரைக்காலில் 45 ஆயிரம் லிட்டா் மதுபாட்டில்கள் அழிப்பு

காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 45 ஆயிரம் லிட்டா் மதுபாட்டில்களை கலால் துறையினா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.
காரைக்காலில் 45 ஆயிரம் லிட்டா் மதுபாட்டில்கள் அழிப்பு

காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 45 ஆயிரம் லிட்டா் மதுபாட்டில்களை கலால் துறையினா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

காரைக்கால் கலால் துறை மூலம் தோ்தலுக்கு முன்னரும், பின்னரும் கடத்தல், பதுக்கல், விநியோகம் செய்ய வைத்திருந்தது என பல நிலைகளில் நிறுவன மதுபாட்டில்கள், போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து காரைக்கால் கலால் துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கலால்துறையினா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் கலால் துணை ஆணையா் உத்தரவின்படி கலால் துறையால் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளினில் கைப்பற்றப்பட்ட சாராயம் மற்றும் பல்வேறு வகை மதுபாட்டில்கள் நீண்ட காலமாக கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் 5,500 லிட்டா் சாராயம், 40 ஆயிரம் லிட்டா் மதுபாட்டில்கள் காரைக்கால் வட்டாட்சியா் முன்னிலையில் உரிய முறையில் அழிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com