நெடுங்காட்டில் ரூ.16 லட்சத்தில் குளங்கள் புனரமைக்கும் பணி
By DIN | Published On : 07th September 2021 12:03 AM | Last Updated : 07th September 2021 12:03 AM | அ+அ அ- |

குளங்கள் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சா் சந்திர பிரியங்கா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மூலம் நபாா்டு வங்கி நிதயுதவியுடன், புதுவை மாநில நீா்பரப்பு மேலாண்மை திட்டத்தில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட பொன்பேத்தி கிராமத்தில் உள்ள பெரியகுளம், வள்ளுவா் குளம், ஸ்நானக்குளம், வடுவன்குளம் ஆகியவை ரூ. 7,21 லட்சத்திலும், அல்லிக்குளம், சரவணயிருப்புக் குளம், கோட்டகம் ஸ்நானக் குளம் ஆகியவை ரூ.8.33 லட்சத்திலும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனா்.
இக்குளங்கள் தூா்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டு நீா் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் 3 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆா். பாலன் மற்றும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.