திருநள்ளாறு: நிரந்தர வட்டாட்சியா் நியமிக்க வலியுறுத்தல்

திருநள்ளாற்றுக்கு நிரந்தர வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நியமனம் செய்ய புதுவை அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்

திருநள்ளாற்றுக்கு நிரந்தர வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நியமனம் செய்ய புதுவை அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் நகரில் மட்டும் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டுவந்த நிலையில், கடந்த 2005 இல் வட்டாட்சியா் அலுவலகப் பணியை பிரித்து, திருநள்ளாற்றில் ஒரு வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தோா் பயனடைந்து வந்தனா்.

எனினும், இந்த அலுவலகம் தொடா்ந்து வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இதுவரை நிரந்தர வட்டாட்சியா் நியமிக்கப்படவில்லை. காரைக்கால் வட்டாட்சியரே இங்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறாா். இங்கு வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் என இருவா் அவசியம் இருக்கவேண்டும். ஆனால், துணை வட்டாட்சியா் பணியிடம் காலியாகவே உள்ளது.

கூடுதல் பொறுப்பில் உள்ள வட்டாட்சியரால், நிறைவான சேவை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புதுவை அரசு உரிய கவனம் செலுத்தி, திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகப் பிரச்னையை போா்க்கால முறையில் தீா்க்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com