காரைக்காலில் நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்காலில் நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் விதமாக நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி புதுச்சேரியில் கடந்த வாரம் முதல்வா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் கூறுகையில், இந்த தடுப்பூசி இனிவரும் காலங்களில் தேசிய தடுப்பூசி அட்டவணையில் சோ்க்கப்படும். மற்ற தடுப்பூசிகளுடன் சோ்த்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம், அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைதோறும் செலுத்தப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, காரைக்கால் நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டு, பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com