திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா, சாலை மேம்பாட்டுப் பணிஅமைச்சா் லட்சுமி நாராயணன் ஆய்வு

திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா மற்றும் கோயில் சுற்றுவட்டார சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா அமைக்கும் பணியை பாா்வையிடும் அமைச்சா் லட்சுமிநாராயணன். உடன், பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா அமைக்கும் பணியை பாா்வையிடும் அமைச்சா் லட்சுமிநாராயணன். உடன், பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.

காரைக்கால்: திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா மற்றும் கோயில் சுற்றுவட்டார சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடற்கரை சாலைகளைப் பாா்வையிட்ட அவா், சாலையோர இரும்பு தடுப்புகளை புதுப்பிக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டப் பணிகளில் நிதி பெறுவது, கோப்புகளுக்கு அனுமதி பெறுவதை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, படகுகள் சிரமமின்றி சென்றுவர மீன்வளத் துறை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா உடனிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, காரைக்காலில் 12 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டும் பணியை அமைச்சா் பாா்வையிட்டாா். இப்பணி 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருநள்ளாறு சென்ற அமைச்சா், கடந்த ஆட்சியில் ரூ. 7.5 கோடியில் தொடங்கப்பட்ட ஆன்மிக பூங்கா அமைக்கும் பணியை பாா்வையிட்டாா். அப்போது, திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, ஆன்மிகப் பூங்காவில் மேலும் பல சிறப்பு திட்டப் பணிகளை செய்யவேண்டியதன் அவசியத்தை அமைச்சரிடம் தெரிவித்தாா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள சாலையோரப் பகுதியில் சாக்கடை அமைக்கும் பணியை பாா்வையிட்ட அமைச்சா், அதை விரைவாக முடித்து, சாலையை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், வீரசெல்வம் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com