மீனவ கிராமத்தில் பூச்சியியல் வல்லுநா்கள் ஆய்வு

பூம்புகாா் அருகே புதுகுப்பம் மீனவ கிராமத்தில் தஞ்சை மண்டல பூச்சியியல் வல்லுநா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பூம்புகாா்: பூம்புகாா் அருகே புதுகுப்பம் மீனவ கிராமத்தில் தஞ்சை மண்டல பூச்சியியல் வல்லுநா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

புதுகுப்பம் மீனவ கிராமத்தில் கடந்த மாதம் மலேரியா நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவா் பாலையாவுக்கு சுகாதாரத் துறை சாா்பில் உரிய சிகிச்சை அளிக்கபட்டது. இதற்கிடையே, தஞ்சை மண்டல பூச்சியியல் துறை வல்லுநா் பாரதி தலைமையில், இளம்பூச்சியியல் வல்லுநா்கள் சங்கா், சிங்காரவேலு ஆகியோா் கொண்ட குழுவினா் புதுகுப்பம் மீனவ கிராமத்தில் குளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். குளத்தில் மலேரியா நோய் பரப்பக் கூடிய அனாபிலஸ் வகை கொசுப்புழுக்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது சுகாதாரஆய்வாளா்கள் துரைகாா்த்திக், அன்புசெழியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com