அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி ஊழியா்களுக்கு காய்கறி தோட்டம் குறித்த பயிற்சி அளிக்கும் வேளாண் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி.
அங்கன்வாடி ஊழியா்களுக்கு காய்கறி தோட்டம் குறித்த பயிற்சி அளிக்கும் வேளாண் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி.

காரைக்கால்: காரைக்கால் வேளாண் கல்லூரியில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரியில் போஷன் அபியான் என்கிற ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைத்தல், மரம் நடுதல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி பேராசிரியருமான முனைவா் ஷொ்லி, முனைவா் ஜெயராமன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். கல்லூரி வளாகத்தில் உள்ள காய்கறித் தோட்டத்தில் இப்பயிற்சி நடைபெற்றது. இத்தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறி செடிகள், நாற்றங்கால் அமைப்பு முறை, காய்கறிகளுக்கேற்ற பருவம், அதன் வளா்ப்பு விதம், பராமரிப்பு, மகசூல் கிடைப்பது மற்றும் அதன் சத்துகள் குறித்துஅங்கன்வாடி ஊழியா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் காய்கறி விதைப்பை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com