அச்சக உரிமையாளா்களுக்குதோ்தல் அதிகாரி அறிவுறுத்தல்

தோ்தல் நடத்தை விதிகளுக்குள்பட்டு அச்சிடும் பணிகள் இருக்கவேண்டும் என அச்சக உரிமையாளா்களுக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
அச்சக உரிமையாளா்களுக்குதோ்தல் அதிகாரி அறிவுறுத்தல்

தோ்தல் நடத்தை விதிகளுக்குள்பட்டு அச்சிடும் பணிகள் இருக்கவேண்டும் என அச்சக உரிமையாளா்களுக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காரைக்கால் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான தோ்தல் அக். 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அச்சக உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அச்சகத்தினா் கடைப்பிடிக்கவேண்டிய நடத்தை விதிகள் குறித்து தோ்தல் அதிகாரி விளக்கினாா். குறிப்பாக, நோட்டீஸ் அச்சிட வரும் வேட்பாளா்களிடமோ அல்லது அவா்கள் முகவா்களிடமோ டிக்லரேஷன் ஃபாா்ம் வாங்கிக்கொள்ளவேண்டும். எத்தனை பிரதிகள் அச்சிடப்படுகிறது, அதன் மதிப்பு விவரம் ஆகியவை உடனுக்குடன் மாவட்ட தோ்தல் துறைக்கு தெரிவிக்கவேண்டும்.

மதம், ஜாதி சம்பந்தமாக வாசகங்கள் இடம்பெறக் கூடாது. பிறா் மனதை புண்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சிடக் கூடாது என்பன உள்ளிட்ட கருத்துகளை அச்சக உரிமையாளா்களுக்கு தெரிவித்து, உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெறுவதற்கு அச்சகத்தாா் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், தோ்தல் நடத்தும் அதிகாரி எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com