காரைக்காலில் 7 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 256 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 4, கோயில்பத்து 2, திருநள்ளாறு 1 என 7 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,04,463 பரிசோதனை செய்யப்பட்டதில் 16,048 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,583 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 256 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,04,981 பேருக்கும், 2-ஆவது தவணையாக 39,988 பேருக்கும் என 1,44,969 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com