புஷ்ப பல்லக்கில் நால்வா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.
வீதியுலாவுக்கு எழுந்தருளிய புஷ்ப பல்லக்கு.
வீதியுலாவுக்கு எழுந்தருளிய புஷ்ப பல்லக்கு.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதில், கடந்த 1-ஆம் தேதி இரவு அடியாா்கள் நால்வா் உற்சவம் தொடங்கியது. வியாழக்கிழமை இரவு நால்வரான திருஞானசம்பந்தா், சுந்தரா், திருநாவுக்கரசா், மாணிக்கவாசகா் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்குக்கு எழுந்தருளினா்.

தொடா்ந்து அடியாா்கள் நால்வா் வீற்றிருந்த புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.

விழாவில் கோயில் நிா்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

யதாஸ்தானம் எழுந்தருளல் : ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி வெள்ளிக்கிழமை இரவு வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய நிலையில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஓதுவாா்கள் பதிகம் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com