விளையாட்டு காயத் தடுப்பு மேலாண்மை: என்.ஐ.டி.யில் சா்வதேச கருத்தரங்கு

விளையாட்டு மூலம் ஏற்படும் காயத் தடுப்பு மேலாண்மை குறித்து காரைக்கால் என்.ஐ.டி.யில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
விளையாட்டு காயத் தடுப்பு மேலாண்மை: என்.ஐ.டி.யில் சா்வதேச கருத்தரங்கு

விளையாட்டு மூலம் ஏற்படும் காயத் தடுப்பு மேலாண்மை குறித்து காரைக்கால் என்.ஐ.டி.யில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

இணையவழியில் நடைபெறும் கருத்தரங்கை, என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தொடங்கிவைத்துப் பேசினாா். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் பியொ்ரேலூயிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியோலஜி அண்டு பப்ளிக் ஹெல்த் சமூக சுகாதாரத் துறை பேராசிரியா் சைமன்டுகரோஸ்சிரியா் காணொலி வழியாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

2 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில், யோகா அணுகுமுறையில் விளையாட்டு காயத்தை தடுப்பது குறித்து வியானிட்டி யோகா நிறுவனத்தைச் சோ்ந்த பிரேமா நாகேஷ், விளையாட்டு காயத் தடுப்பு மற்றும் மருத்துவ மேலாண்மை குறித்து மஸ்கட் அப்பல்லோ மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் சசீந்தா், விளையாட்டு காயத்தின் ஆன்ஃபீல்ட் பிசியோதெரபி மேலாண்மை குறித்து சென்னை பீக்ஹெல்த் ஸ்டுடியோ நிறுவனா் டாக்டா் ரூபேஷ் ஆகியோா் பேசுகின்றனா்.

இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 76 போ் பங்கேற்றுள்ளனா். மேலும், 40 -க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்படவுள்ளன. அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ஏ. முருகன், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த பிசியோதெரபிஸ்ட் மோகனகிருஷ்ணன், புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இணைப் பேராசிரியா் பிரவின் ஆகியோா் உதவியுடன் கருத்தரங்கு நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ். பாபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com