திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பந்தல்கால் நடும் நிகழ்வில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.
பந்தல்கால் நடும் நிகழ்வில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாா்.

இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் தொடக்கமாக கோயில் வளாகத்தில் பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடிக்கம்பம் அருகே பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, பிராகார வலமாக கொண்டுவரப்பட்ட கம்பம் பைரவா் சந்நிதி அருகே நடப்பட்டது.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரம்மோற்சவ விழா மே 26-ஆம் தேதி கோயில் கொடிக்கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலா, செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல், பின்னா் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஜூன் 6-இல் தேரோட்டம் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி விசாகத் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

மகிஷ சம்ஹார விழா: இதுபோல அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவையொட்டி, இக்கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மே 2-ஆம் தேதி மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவும், 3-ஆம் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூா்வாங்க அபிஷேகமும், 4-ஆம் தேதி பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் மகிஷ சம்ஹார பெருவிழா தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com