காரைக்கால் ஜிப்மா் சேவை முகாம் ஆக.13 இல் தொடக்கம்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த, ஜிப்மா் தொலைநிலை சேவை முகாம் காரைக்காலில் ஆக. 13 முதல் செயல்படவுள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த, ஜிப்மா் தொலைநிலை சேவை முகாம் காரைக்காலில் ஆக. 13 முதல் செயல்படவுள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்காலில் வாரம்தோறும் நடைபெற்றுவந்த புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் சேவை முகாம், பிறகு மாதம் இருமுறை என மாற்றப்பட்டது. பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் வருகையால், காரைக்கால் பகுதியினா் பயனடைந்துவந்தனா். கரோனா பரவல் பொதுமுடக்கத்தால் 2020 முதல் இச்சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இச்சேவையை மீண்டும் தொடங்க ஜிப்மா் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன்படி, வரும் 13 ஆம் தேதி முதல் ஜிப்மா் தொலைநிலை சேவை முகாம் காரைக்காலில் மீண்டும் தொடங்குகிறது. இந்நாளில், சிறுநீரகம் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவ நிபுணா்கள் முகாமில் பங்கேற்கின்றனா்.

வரும் 13 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 15 நாள்களுக்கு ஒருமுறை எந்தெந்த துறையின் சிறப்பு மருத்துவா்கள் காரைக்கால் மையத்துக்கு செல்லவேண்டுமென பட்டியலிட்டு, புதுவை ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com