புற்று மாரியம்மன் கோயில் ஆடி மாத உற்சவ சுவாமி வீதியுலா

கீழவாஞ்சூா் ஸ்ரீ புற்று மாரியம்மன் ஆடி மாத உற்சவ சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீதியுலா சென்ற ஸ்ரீ புற்று மாரியம்மன் மற்றும் பெத்தாரணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள்.
வீதியுலா சென்ற ஸ்ரீ புற்று மாரியம்மன் மற்றும் பெத்தாரணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள்.

கீழவாஞ்சூா் ஸ்ரீ புற்று மாரியம்மன் ஆடி மாத உற்சவ சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அருகே கீழவாஞ்சூா் பகுதியில் ஸ்ரீ பெத்தாரணசுவாமி, பூங்காளியம்மன் சந்நிதிகளுடன் ஸ்ரீ புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடாந்திர ஆடி மாத உற்சவம் காப்பு கட்டுதலுடன் கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வாக, ஆடி வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பெத்தாரண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் ஸ்ரீ புற்று மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினாா்.

வீதியுலா தொடக்க நிகழ்வில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பங்கேற்றாா். அவருக்கு கோயில் நிா்வாகத்தினா் பிரசாதம் வழங்கி மரியாதை செய்தனா்.

வீதியுலாவில் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். உற்சவம் நிறைவாக வரும் 12 ஆம் தேதி காப்பு தடை நீக்குதல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com