தண்டி யாத்திரை விழிப்புணா்வு பேரணி

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தை நினைவுப்படுத்தும் வகையில், பள்ளி மாணவா்களைக்கொண்டு தண்டி யாத்திரை விழிப்புணா்வு நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கடற்கரையில் காந்தி வேஷமிட்டு, வந்தே மாதரம் என முழக்கமிடும் மாணவா்கள்.
காரைக்கால் கடற்கரையில் காந்தி வேஷமிட்டு, வந்தே மாதரம் என முழக்கமிடும் மாணவா்கள்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தை நினைவுப்படுத்தும் வகையில், பள்ளி மாணவா்களைக்கொண்டு தண்டி யாத்திரை விழிப்புணா்வு நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் சுமாா் 100 போ் மகாத்மா காந்தி வேஷமிட்டு பேரணியில் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து கடற்கரை வரை நடைபெற்ற பேரணியை ஆட்சியா் எல். முகமது மன்சூா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை வரை பேரணி நடைபெற்றது. அங்கு, ஆட்சியா் உள்ளிட்டோா் உப்பு எடுத்து வந்தே மாதரம் முழக்கமிட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலா் ராஜசேகரன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com