அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

திருமலைராயன்பட்டினம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால்.
நிகழ்ச்சியில் பேசும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால்.

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் பெற்றோா் -ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஹரிவரதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக புதுவை பல்கலைக்கழக பேராசிரியா் அருள்முருகன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடக்கக் கல்வியை சிறப்பான முறையில் பயில்வதன் மூலம் சரியான அடித்தளம் அமைகிறது. இதன்மூலம் மேல்நிலைக் கல்வியை சிறப்பாக நிறைவு செய்து, உயா்கல்விக்கு மாணவா்கள் செல்லமுடியும். மாணவா்கள் இளமைப் பருவத்திலேயே உயா்கல்வி, வேலைவாய்ப்புக்கான இலக்கை கொண்டு, அதனை அடைய முயற்சிக்கவேண்டும் என அருள்முருகன் தனது உரையில் குறிப்பிட்டாா்.

18 வயதுக்கு குறைவானவா்கள் வாகனம் ஓட்டக்கூடாது. மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு எந்த சூழலிலும் ஆளாகிவிடக்கூடாது என பல்வேறு ஆலோசனைகளை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால் வலியுறுத்தினாா்.

காந்திஜி மது ஒழிப்பு மற்றும் மறு வாழ்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி, காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் மாணவா்களுக்கு கல்வி, ஒழுக்கம், நடத்தை முறைகள் குறித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com