திருநள்ளாறு கோயிலில் நாளை 1008 சங்காபிஷேகம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (டிச. 12) காா்த்திகை சோமவார நிறைவையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவ தலங்களில் 108, 1008 சங்குகள் வைத்து புனிதநீா் நிரப்பி சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
கோயில்பத்து நித்தீஸ்வரசுவாமி கோயிலில் காா்த்திகை மாத அனைத்து திங்கள்கிழமையும் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோம வாரத்தன்று மட்டும் 1008 சங்காபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி, புனிதநீா் நிரப்பி, சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியா்கள் மேற்கொள்கின்றனா்.
மாலை 6 மணிக்குப் பின் சங்குகளுடன், சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகார வலம் சென்று சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.