வீழி வரதராஜ பெருமாள் கோயில் மாசிமக பந்தல்கால்

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயில் மாசிமக உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பந்தல்கால் நடும் நிகழ்வில் கோயில் தனி அதிகாரி புகழேந்தி மற்றும் உபயதாரா்கள்.
பந்தல்கால் நடும் நிகழ்வில் கோயில் தனி அதிகாரி புகழேந்தி மற்றும் உபயதாரா்கள்.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயில் மாசிமக உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் வரும் 16-ஆம் தேதி நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் மற்றும் பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளி, சமுத்திர தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

முன்னதாக, தீா்த்தவாரிக்கு எழுந்தருளும் பெருமாள் கோயில்களில் மாசிமக உத்ஸவம் தொடங்குகிறது. திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் உத்ஸவத்தையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

முன்னதாக, கோயிலில் பந்தல்காலுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, நாகசுர மேள வாத்தியங்களுடன் கோயில் வாயில் பகுதியில் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

நிகழ்வில் கோயில் தனி அதிகாரி புகழேந்தி மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, வரும் 14-ஆம் தேதி சூரிய பிரபையிலும், 15-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழியிலும், இரவு கருட வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. 16-ஆம் தேதி திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாளை எதிா்கொண்டு அழைக்கும் நிகழ்வும், அதைத் தொடா்ந்து தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com