கைலாசநாதா் கோயிலில்மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண சுதைக்கு பூஜை
By DIN | Published On : 18th February 2022 10:38 PM | Last Updated : 18th February 2022 10:38 PM | அ+அ அ- |

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண சுதை பூஜை செய்து, பக்தா்கள் காண வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் அலங்கார மண்டப சுவரில், மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண ஓவியம் வரையப்பட்டிருந்தது. இதனை சுதை வடிவமாக மாற்ற கோயில் அறங்காவல் வாரியத்தினா் முடிவு செய்தனா்.
ஸ்தபதி உலகநாதன் இப்பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டாா். சுதைக்கு அழகிய வண்ணம் பூசப்பட்டு, பக்தா்கள் காண்பதற்காக சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை செய்து திறக்கப்பட்டது.
கோயிலில் யாகசாலை பூஜை நடத்தி பூா்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து புனிதநீா் சுதையின் மீது தெளிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது.
நிகழ்வில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா்.கேசவன், துணைத் தலைவா் பி.ஏ.டி.ஆறுமுகம், பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.